வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள். அதற்கேட்ப ஒரு நாட்டில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகாட்டா ப்ரீஃபெக்சர் மாகாணத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு என்றே மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கியுள்ளது இந்த சட்டம். ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாள் மக்கள் சிரிப்பதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் சிரிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கவும் அலுவலக நிர்வாகங்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Please follow and like us: