மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால் ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்த திட்டம் வகை செய்கிறது.திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மசோதாவை நடப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.