ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பஹானகா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஷ்வர், புவனேஸ்வர், ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கியது.
288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
NEWS EDITOR : RP