கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று (செப்.11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர்.
இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இன்று மாலை சோதனை முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர் உயிரிழப்புக்கு நிபா வைரஸ் தான் காரணம் என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: