Spread the love

திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (வயது 31). இவரது மனைவி காயத்ரி (வயது 24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலாபூர் பைபாஸ் சாலையில் சென்றபோது பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram