தமிழக வெற்றிக் கழகம் நடத்தப்படும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கையை அசைத்தபடி நடிகர் விஜய் மேடை ஏறினார். சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜய்யின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “நீட் தேர்விற்கு நிரந்தரத் தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இதில் சிக்கல்கள் இருந்தால், இடைக்கால தீர்வாக சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.