நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 காசுகள் சரிந்து 490 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீஸன் என்பதால் பரவலாக இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது.
இதன் காரணமாக முட்டை விலையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாட்டின் பிற நகரங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): சென்னை 560, பர்வாலா 541, பெங்களூரு 550, டெல்லி 564, ஹைதராபாத் 525, மும்பை 590, மைசூரூ 550, விஜயவாடா 530, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: