சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ், தற்போது ‘மை3’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஜனனி, ஆஷ்னா சாவேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார்.
ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.
NEWS EDITOR : RP