திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் ஐவேலி அகரம் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையாக விசாரிக்காத அதிகாரிகள் மீது துறைரீதியாக விசாரணை நடத்த கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமையில் நேற்று காலை திருவள்ளூர் திருப்பதி சாலையில் அமைந்துள்ள தர்காவில் இருந்து ஊர்வலமாக வந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடத்தில் இது சம்பந்தமாக மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
NEWS EDITOR : RP