கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ~ சென்னை கோர்ட்டு தீர்ப்பு..!!

Spread the love

சென்னை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (29), ஜோசுவா (20), பாபு (40), வெங்கட சுப்பையா (58) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 16-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, ராஜேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram