இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில், சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு செய்துள்ளார். பாரத் சாஹு என்ற அந்த டெலிவரி பாய் செப். 23-ந்தேதி கஜனனுக்கு ஐபோனை டெலிவரி செய்யச் சென்றார். அப்போது சாஹுவை கஜனனும் அவரது நண்பரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அவரது உடலை ஒரு சாக்கு பையில் வைத்து இந்திரா கால்வாயில் வீசி உள்ளனர். சாஹு 2 நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செப். 25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சாஹுவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Please follow and like us: