விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.கடந்த 5-ஆம் தேதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான ஹேஷ்டேகுகள் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. இந்த நிலையில், இந்த ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் 24 மணி நேரத்துல் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை லியோ ட்ரெய்லர் படைத்துள்ளது.
NEWS EDITOR : RP