சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு நிர்வாகத்தின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குநர் வூ சீன்-வு இன்று தெரிவித்துள்ளார்.ஹுவாலியன் கவுன்டி பகுதியில் நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று. கடந்த 3- ந்தேதியில் இருந்து இதுவரை பதிவான நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 1,095 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தைவானின் கடலோர பகுதியில் கடந்த 3-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் தைவானில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என அறியப்படுகிறது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 821 பேர் காயமடைந்தனர்.
தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..!!
Please follow and like us: