தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் நேற்று தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி நடத்தினர். அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்தனர். இந்நிலையில் போலீசாரின் அனுமதியின்றி, காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகாமையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு அமைதிப் பேரணி செல்ல முற்பட்டனர்.
இந்நிலையில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசார் அனுமதியின்றி அமைதிப் பேரணி செல்ல முற்பட்ட பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
NEWS EDITOR : RP