மும்பை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து கவனித்து வருகிறது. நிதியாண்டில் பணவீக்கம் 4%-க்கு மேலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: