உலகின் விலையுர்ந்த மாம்பழ வகையான மியாசாகி மேற்கு வங்க மாம்பழ திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மல்கோவா, பங்கனபள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன மியாசாகி? ஜப்பான் நாட்டை சேர்ந்த இந்த மாம்பழத்திற்கு சர்வதேச மார்க்கெட்டில் கடும் கிராக்கி உண்டு. ஒரு கிலோ 2,75 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாம்பழம் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் வளர்க்கப்படுகின்றன. 70 களின் பிற்பகுதியில் இந்த மாம்பழ உற்பத்தி தொடங்கியது. மியாசாகி என்பது ஒரு வகை “இர்வின்” மாம்பழமாகும், இது தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக விளையும் மஞ்சள் “பெலிகன் மாம்பழத்தில்” இருந்து வேறுபட்டது.
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு பண்ணையில் இந்த மாம்பழம் வளர்க்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது ஜாப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் மாம்பழத்தின் நாற்றை தங்களுக்கு வழங்கியதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த மாம்பழத்தை பாதுகாப்பதற்காக பாதுகாவலர்களையும் அவர்கள் நியமித்துள்னர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரில் ஜூன் 9ஆம் தேதி மாம்பழ திருவிழா தொடங்கியுள்ளது. இதில் 250க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு உலகின் விலையுர்ந்த மாம்பழமான ‘மியாசாகியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP