மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
“எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்து உள்ளேன். மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. செல்போன் சிக்னல் இல்லை எதுவுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருக்கும் பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் வாழும் மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.