லெபனானில் பிறந்து வளர்ந்த மியா கலிஃபா 2001 முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலியல் நடிகையாக குறுகிய காலங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவினர் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததால் உலக அளவில் புகழ் பெற்றார் மியா. தற்போது பாலியல் நடிப்பினை கைவிட்டு சமூக வலைதளப் பிரபலமாகவும் வெப் கேம் மாடலாகவும் மற்றும் விளையாட்டு வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகை மியா கலிஃபா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ‘ப்ளே பாய்’ எனும் பாட்காஸ்ட் மியாவுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் கனடா புராட்கேஸ்டர் டாட் செபிரோ மியாவுடனான தனது ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP