தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை-ஆலந்தூர் மார்க்கத்தில் ஒற்றை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் முதல் சின்னமலை வரையிலான சாதாரண சேவைகள் தொடர்ந்து தற்போது இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அதில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே குறைந்த தூர சுற்றுச் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான சேவைகள் கிரீன் லைனில் இயக்கப்படுகின்றன.
NEWS EDITOR : RP
Please follow and like us: