மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.இந்நிலையில், இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.பிடித்த இடம் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த தோனி,
“கிரிக்கெட் விளையாடும் போது பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும், விளையாடிவிட்டு உடனடியாக திரும்பி வரும் சூழலே இருந்தது. இருப்பினும், எனது மனைவிக்கு பயணம் செய்வதில் அதிக விருப்பம் உள்ளது. தற்போது, நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்க விரும்புகிறோம்.