‘மௌன ராகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மின்னலே’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘காதலன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மயக்கம் என்ன’, ‘ரெமோ’, ‘சிவாஜி’, ‘குட்டி’ என அடிஷ்னல் சீட் வரை ‘ஸ்டாக்கி’ படங்களின் பட்டியல் நீளும். செல்வராகவனின் படங்கள் இதனை தெரிந்தோ, தெரியாமலோ ஊக்குவித்தே வந்துள்ளன. ‘7ஜி ரெயின்போ காலனி’ காதல் என்ற போர்வைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஸ்டாக்கிங் கதைக்களம் கொண்ட திரைப்படம்.‘காதல் கொண்டேன்’ படத்தையும் இ்ந்த லிஸ்டில் தாராளமாக சேர்த்துக்கொள்ள முடியும். போலவே ‘மயக்கம் என்ன’ சொல்லவே தேவையில்லை. ‘வெட்ட’ச் சொனன ஒருவனை காதலனாக ஏற்று திருத்தும் கதை. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றிமாறன் படங்களிலும், இந்த பிரச்சினைகள் இருப்பதை உணரமுடியும். ‘ஸ்டாக்கிங்குக்கு’ தமிழில் ‘வாங்க பழகலாம்’ என புது வார்த்தையை கண்டுபிடித்து ‘சிவாஜி’ படத்தில் பயன்படுத்தினார் ரஜினி.கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் அதீத டார்ச்சர் விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என தெரிந்தும் விடாப்பிடியாய் இருக்கும் நாயகன், ‘பிடிக்கவில்லை’ என்று சொன்ன நாயகியின் உணர்வுகளை மதிக்காமல், மாறுவேடமிட்டு, துரத்திச் சென்று லவ் டார்ச்சர் செய்தது, தான் நினைத்ததை சாதிக்க துடிப்பது சைக்கோத்தனம். படத்தின் சில ஜிகினா சீன்களை கலைத்துவிட்டுப் பார்த்தால், கீர்த்தி சுரேஷின் திருமணத்தை நிறுத்தி தொல்லை கொடுத்த உண்மையான வில்லனே நாயகன் தான். ‘மின்னலே’ படமும் கூட கிட்டத்தட்ட இதற்கு நெருக்கமான கதைதான்.