கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி – சுசித்ரா இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பெண்ணின் பொற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அதே கிராமத்தில் அரை நிர்வாணமாக தரையில் அமர வைத்து அனைவரில் காலில் விழ வலியுறுத்தியும் தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் வீடியோ காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.