லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171 வது படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றிணையும் படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறதா என்பதே, போஸ்டரைப் பார்த்ததும் அனைவருக்கும் எழுந்த கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், இசையின் மேல் ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன், எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற இண்டிபெண்டெண்ட் ஆல்பங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் அவர் லோகேஷ் கனகராஜை வைத்து ‘இனிமேல்’ என்ற ஆல்பம் ஒன்றை இயக்கவுள்ளார்.
Please follow and like us: