ஒருவரே பல பான் அட்டைகளை பெற்றுக் கொண்டு, வரி கணக்கு தாக்கலில் மோசடி செய்து வந்தது வருமான வரித் துறைக்கு தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை பான் எண் வாங்கியவர்கள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறையின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பின்னர், அதற்கான காலக்கெடு அவ்வப்போது நீடிக்கப்பட்டது.
அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். ஒருவேளை ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், நாளை முதல் பான் எண் செல்லாததாகி விடும். இதனால் ஒருவர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டிருக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: