கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம்.கிர்ணி பழம் கோடை காலத்திற்கு ஏற்றது. இந்தப் பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதோடு வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மாக்னீசியம் ஆகியவைவும் உள்ளது. பல ஊட்டச்சத்துகளும், மருத்துவ குணங்களும் நிறைந்த கிர்ணி பழத்தை ஜூஸாக செய்தும் அருந்தலாம்.
உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் கோடைப் பழங்களை பற்றி பார்க்கலாம்..!!
Please follow and like us: