புதுச்சேரி, நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில், அவரது ரசிகர்கள் பேனர்களை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம் உள்ள நடுக்கடலில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: