சித்தோடு அருகே லட்சுமி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வீடுகள் இன்றி நாடோடி மக்களாக வாழ்ந்து வந்தவர்கள் குறவர் சமூக மக்கள். வீடுகள் கூட்ட பயன் படும் விளக்குமாறு செய்வது, வீடுகளில் பயன்படுத்தும்
எரிவாயு அடுப்புகளை சரி செய்வது என கிடைக்கும் தொழிலை செய்து தங்களது
வாழ்க்கையை நடத்தி வந்த குறவர் சமூக மக்களுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்பு சித்தோடு அருகே உள்ள கன்னிமார் காடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 25க்கும் மேற்பட்டோருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த இடத்தில் குறவர் சமூக மக்கள் ஓலை குடிசைகள் மற்றும் சிமெண்ட் சீட் மேற்கூரைகளை அமைத்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் குறவர் இன மக்களை பொது தடத்தில் நடக்க கூடாது என்றும் பொது குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது எனவும் சாதிய தீண்டாமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதி மக்கள் வாழும் பகுதிக்கு
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல், வரும் உதவிகளையும் தடுத்து உள்ளனர்.நகர பகுதியாக இருந்தும் மலை கிராமங்களுக்கு செல்ல சாலை இல்லை, மின் கம்பம் இருந்தும் மின் விளக்கு இல்லை, பட்டா இருந்தும் வீடுகள் கட்ட போதுமான அரசு உதவிகள் இல்லை, சாக்கடை வசதி இருந்தும் அதனை முறையாக பராமரிப்பு செய்வது இல்லை, குடிநீருக்காக பொது குழாய் இருந்தும் அதில் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பது இல்லை.
பல்வேறு வகையான அடக்குமுறையை மாற்று இனத்தவர் தங்கள் மீது செய்தவதாக கண்ணீருடன் குறவர் இன மக்கள் புகார்..!!
Please follow and like us: