‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ், ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அஜய்தேவ்கன் ஜோடியாக ‘மைதான்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருந்தார். அப்போது உடலை மிகவும் குறைத்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் அதில் பிரியாமணி நடித்தார்.
படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும் சினி 1 ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழில், ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறது.
இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ இந்தி ரீமேக்கில் வருண் தவண் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகிறார். முதலில் ஜான்வி கபூர் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். படத்தில் 2 ஹீரோயின் இருப்பதால் இவர்கள் இருவரும் நடிக்கலாம் என்று தெரிகிறது.
NEWS EDITOR : RP