டாஸ்மாக்’ கடையில் சுடிதார் அணிந்த 2 இளம்பெண்கள் மதுபாட்டில்கள் வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியை நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தண்ணியடி, பெண்ணே தண்ணியடி. எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும்’, என்ற வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார். மேலும் சில வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், அவரது இந்த பதிவை இயக்குனரும், நடிகருமான நவீன் கண்டித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமானிய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பேசுவதை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP