முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் நாளை (15-ம் தேதி) காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
நாளை கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
NEWS EDITOR : RP