நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹுக்கும் பாடல் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. Spotify தளத்தில் டாப் இந்திய பாடல்கள் வரிசையில் ஹுக்கும் பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழ்நாட்டில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.
இதனிடையில், விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம் விரைவில் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இவ்வளவு பெரிய வெற்றியைக் கண்டதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
NEWS EDITOR : RP