ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
ஜப்பானின் கிபு மாகாணத்தில் ககாமிகாஹரா நகரில் ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் சீனா, முன்னாள் சாம்பியன் தென்கொரியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜப்பானை இந்திய அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த முறை, இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றால், இதுவே இந்தியாவின் முதல் ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டமாகும். மேலும், இத்தொடரின் இறுதியில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதன்மூலம், வரும் நவம்பர் மாதம் சிலியில் நடைபெறவுள்ள ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெரும் வாய்ப்பை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP