இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள 2ஜி போன் பயனர்களை 5ஜி போன் பயனர்களாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
Please follow and like us: