சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அந்த பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அவர் கூகுள் பே வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார். அவர்கள் முதியவரின் தகவல்களை கேட்டு பெற்றுள்ளனர். அதன் பிறகு அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ரூ.88000 வரை டெபிட் ஆகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் முதியவர், அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பெறப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து டிராக் செய்த பொழுது அந்த தொலைபேசி எண் ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அண்ணாசாலை போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று மோசடி செய்த முகமது பெலால் (23) என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முகமது பிலால் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து போலியான வாடிக்கையாளர் மையம் ஒன்றை உருவாக்கி அதில் புகார் தெரிவிப்பவர்களின் தகவல்களை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
NEWS EDITOR : RP