சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி, ஒரு பவுன்தங்கம் ரூ.47,560 ஆக இருந்தது. இதன்பிறகு, இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,960 ஆக இருந்தது. இதன்பிறகு, படிப்படியாக விலை குறைந்து வருகிறது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.77 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.77,000 ஆகவும் இருந்தது.ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.5,780-க்கு விற்கப்பட்டது.
Please follow and like us: