திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல இன்று கடையில் இருந்துள்ளார். இந்நிலையில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.பின்னர் அவரின் கை, கால்களை கட்டி போட்டு, சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனை கொண்டு மிரட்டல் விடுத்து நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Please follow and like us: