அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ள இப்படத்திற்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதுவரை சாஃப்ட்டான கேரக்டரில், ரொமான்ஸ் ஹீரோவாக பார்த்து ரசித்த துல்கர் சல்மான், முதன்முறையாக முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘கிங் ஆஃப் கோதா’ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துல்கர், ‘நான் பிரபல நிறுவனத்தில் மேலாளாராக இருந்து நடிகராக ஆசைப்பட்டதும் அதற்கு துணை நின்றது என் தந்தை மம்மூட்டிதான். சினிமா துறையில் அவரே என் ஆதர்சம். என் தந்தையின் படங்களை ரீமேக் செய்து நடிக்கும் விருப்பம் எனக்கில்லை. காரணம், ரீமேக் படங்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை.
ஏற்கனவே ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர், முதல் பாடலான’ கலாட்டாக்காரன்’ பாடல் மற்றும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP