இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.
இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் நடிகை மஞ்சு வாரியர் இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்த விடுதலை 2 திரைப்படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களை சேர்க்க முடிவு செய்துள்ளாராம். அதனால் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளதாம்.
NEWS EDITOR : RP