நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா? இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா? என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இதனை சமீபத்தில் உறுதிசெய்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.சூர்யா 45 படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’ திரைப்படங்களில் நடித்திருந்தனர். இவர்கள் நடித்த இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
‘சூர்யா 45’ படத்தில் ‘த்ரிஷா’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!
Please follow and like us: