தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில், மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.இதனை தொடர்ந்து, மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மயோசிடிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மயோசிடிஸ் இந்தியா தெரிவித்திருந்தது. நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
NEWS EDITOR : RP