கடந்த பிப்ரவரி மாதம் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் டாடா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கணவன் மனைவியாகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மிக நேர்த்தியாக சொல்லிய படம் தான் டாடா. இந்த படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்தை துருவ் விக்ரமின் நடிப்பில் இயக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து துருவ் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அப்படம் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் இது சம்பந்தமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதனால் தற்போது கணேஷ் கே பாபு இயக்க உள்ள மூன்றாவது படம் துருவ் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கணேஷ் கே பாபு, துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
NEWS EDITOR : RP