மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பதவிக்கு வந்ததும் முதலில் கையொப்பமிட்டது பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம். இது பெண்களின் வெளிப்புறப் பயணங்களை சுலபமாக்கியது. பள்ளிக்கூடங்களில் சத்தான காலை உணவுத் திட்டம் குடும்பப் பெண்களின் காலை நேர வேலை சுமையை பெரிதும் குறைத்ததோடு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளது. அதையும் தாண்டி குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, கற்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. இவை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர். ஒரு குடும்பத் தலைவிக்கு தான் தெரியும் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்த பொருளாதாரம் எந்த அளவிற்கு முக்கியம் என்று.. வறுமையில் வாடும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் பிறந்ததும் அரசிடமிருந்து ஒரு தொகையை உரிமையுடன் பெற்றுக் கொள்ளும் நிலை இருப்பின் எத்தகைய சிறப்பா இருக்கும்! அதுதான் இப்போது நிறைவேறி இருக்கிறது. ஒரு குடும்பத் தலைவிக்கு எனது வேண்டும் என்று பார்த்து பார்த்து நாம் கொடுப்பதையும் தாண்டி அவர்கள் விரும்பிக் கொள்வதை பெற்றுக்கொள்ள உரிமை தொகையாய் மாதம் கொடுப்பது எனும் திட்டம், மங்கையர்களுக்கான முன்னேற்ற திட்டங்களில் திலகம் என்றால் மிகையில்லை. இந்த வரிசையில் திராவிட முன்னேற்றக் கழகம் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுபவர்கள் என்பதற்கு இணங்க தற்போது பெண்களுக்கான உரிமைத் தொகை அளிக்கும் திட்டம் துவங்கியாகிவிட்டது.
NEWS EDITOR : RP