அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார் . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்
NEWS EDITOR : RP
Please follow and like us: