புதிய யோசனைகளை வரவேற்று, அவற்றை பாதுகாத்து, நாட்டின் செழுமையான பன்முக தன்மையை கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நியூயார்க், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தில், பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து வெளியிட்டு உள்ள வீடியோ செய்தி ஒன்றில், யோகா வழியே ஒன்றிணைக்கும், தத்தெடுக்கும் மற்றும் தழுவி கொள்ளும் பாரம்பரிய முறைகளை இந்தியா எப்போதும் வளர்த்து வந்து உள்ளது.
இதேபோன்று முரண்பாடுகள், தடங்கல்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை யோகா வழியே நீக்குவதற்கான ஒரு உள்ளார்வத்துடனான வேண்டுகோளையும் விடுத்து வந்து உள்ளது என கூறியுள்ளார்.
இந்தியர்கள் புதிய யோசனைகளை வரவேற்று, அவற்றை பாதுகாத்து, நாட்டின் செழுமையான பன்முக தன்மையை கொண்டாடி உள்ளனர். அதுபோன்ற உணர்வுகளை யோகா வலுப்படுத்துவதுடன், உள்நோக்கு பார்வையை விரிவுப்படுத்தி மற்றும் நமது ஒற்றுமைக்கான உணர்வை பற்றிய சுயநினைவுடன் நம்மை இணைக்கிறது. உயிர் வாழ்வனவற்றிற்கு அன்பிற்கான ஓர் அடிப்படையையும் வழங்குகிறது என அவர் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP