மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜூலை 20- ஆம் தேதி முதல் ஜூலை 24- ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. அதேபோல், ஜூலை 27, ஜூலை 29, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 8, ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக வெஸ்ட் இண்டீசுக்கு பயணம் செய்யும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில், ருதுராஜ் கெய்க்வாட், யாசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு அறிமுக போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
நவ்தீப் சைனி மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கட்டுள்ளார். அதே சமயம் சதேஷ்வர் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், முஹமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP