‘ஆசிய விளையாட்டு’ போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘கோல்ஃப்’ போட்டியில் இந்தியா வீராங்கணை ‘அதிதி அசோக்’ வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்..!!

Spread the love

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்த கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. சுமார் 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், , செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது நடைபெறும் ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர் வீராங்கனை பங்கேற்று விளையாடி வருகின்றன.இன்று நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் களம் கண்ட ஸ்ட்ரோக் முன்னிலையில் இந்த நாளைத் தொடங்கினார். எனினும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அர்பிசயா யூபோல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் கோல்ஃப் விளையாட்டில் இந்திய மகளிர் முதல் முறையாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram