காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் நேற்று (02.10.2024) இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்கவும். நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது..!!
Please follow and like us: