பாலஸ்தீனத்தின் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 80% சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும், பிணைக் கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐநா பொதுச்சபையில் வரைவுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் வாக்களித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.