மாஸ்கோ, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்தின.
இதனை தொடர்ந்து ரஷியா கச்சா எண்ணெய் விற்பனையை ஆசியா பக்கம் திருப்பியது. ரஷியாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதத்தில் ரஷியாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா – சீனா முன்னிலையில் உள்ளன. இந்தியாவும், சீனாவும் இணைந்து கடந்த மாதம் ரஷியாவின் 80 சதவிகித கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துள்ளது. ரஷியா கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவரும் நிலையில் தினமும் 5 லட்சம் பேரல் வாங்கி வந்த சீனா தற்போது 22 லட்சம் பேரல் கொள்முதல் செய்து வருகிறது.
அதேபோல், ரஷியாவிடம் குறைவாகவே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துவந்த இந்தியா தற்போது தினமும் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
NEWS EDITOR : RP