தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்கழி, தை மாதம் முன் பனிக்காலமாகும். இருப்பினும் மார்கழியில் சில வாரங்கள் மட்டுமே பனியின் தாக்கம் இருந்தது. பின்பு மெல்ல பனி விலகத் தொடங்கியது. பொதுவாக மாசி,பங்குனி வரை பின் பனிக்காலம் தொடரும். ஆனால் முன்னதாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்க நிலையும் தொடர்கிறது.ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே விற்பனை செய்து வரும் சிவராமன் என்பவர் கூறுகையில், ”மலிவான விலையில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதில் தர்பூசணி முதலிடம் வகித்து வருகிறது. இப்பழங்கள் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்துள்ளது. 17ஆண்டுகளுக்கும் மேலாக தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக மணல் மேவி, கீற்று கொட்டகை அமைந்துள்ளேன்.
தேனி மாவட்டத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு..!!
Please follow and like us: